வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2021 9:57 PM IST (Updated: 10 Nov 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், 
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நேற்று மதியம் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முருகதாஸ் தலைமை தாங்கினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு, மண்டல அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோருக்கு பயன்படுத்த எடுக்கப்பட்ட தனியார் வாகனங்களுக்கான வாடகை உள்ளிட்ட செலவினங்களை முழுமையாக வழங்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மதிப்பூதியம் வழங்க வேண்டும்.
6 மற்றும் அதற்கு மேல் சட்டமன்ற தொகுதிகள் உள்ள மாவட்டங்களுக்கு துணை கலெக்டர் நிலையில் நேர்முக உதவியாளர் பணியிடம் வழங்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் செலவின தொகையை வழங்காததால் வருவாய்த்துறை அலுவலர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இனியும் நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால் வருகிற 13, 14, 27, 28-ந் தேதிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்களை புறக்கணிப்பு செய்வது என்று ஆர்ப்பாட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.. முடிவில் கலெக்டர் அலுவலக பொறுப்பாளர் மோகன் நன்றி கூறினார்.

Next Story