சின்னசேலம் சங்கராபுரம் பகுதி ஏரிகளில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு


சின்னசேலம் சங்கராபுரம் பகுதி ஏரிகளில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
x
தினத்தந்தி 10 Nov 2021 10:15 PM IST (Updated: 10 Nov 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் சங்கராபுரம் பகுதிகளில் உள்ள ஏரிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வுசெய்தார்


சின்னசேலம்

கடத்தூர், தெங்கியாநத்தம் ஏரிகள்

சின்னசேலம் பகுதியில் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கோமுகி அணையில் இருந்து உபரிநீர் பொதுப்பணித்துறை பிரிவு வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதில் அக்கராபாளையம் பகுதியிலிருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால் தண்ணீர் கடத்தூர் மற்றும் தெங்கியானத்தம் எரிகளுக்கு வந்ததால் 2 ஏரிகளும் நிரம்பின. இதை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஏரியின் பரப்பு, தண்ணீர் கொள்ளளவு, பாசன வசதி பெறும் நிலங்கள், ஆக்கிரமிப்பு விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

பின்னர் அவர் கூறும்போது, கடத்தூர் ஏரியின் மூலம் 57.89 ஹெக்டேர் விவசாய நிலங்களும், தெங்கியாநத்தம் ஏரியின் மூலம் 32.42 ஹெக்டேர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் பைத்தந்துறை, தென்செட்டியந்தல், நமச்சிவாயபுரம், வெட்டிபெருமாள் அகரம் ஆகிய ஏரிகள் வழியாக சின்னசேலம் பெரிய ஏரிக்கு தண்ணீர் வரத்தால் அப்பகுதி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றார். அப்போது சின்னசேலம் ஒன்றிய குழு தலைவர் சத்தியமூர்த்தி, துணைத் தலைவர் அன்புமணிமாறன், தாசில்தார் அனந்தசயனன், வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரபு, வருவாய் ஆய்வாளர் சிங்காரவேலு மற்றும் கடத்தூர், தெங்கியாநத்தம் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

பாண்டலம் ஏரி

அதேபோல் சங்கராபுரம் அருகே உள்ள பாண்டலம் ஏரியை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏரியில் நிரம்பி வழியும் உபரி நீர் வயல்களுக்குள் புகுவதால் பயிர்கள் பாதிப்படைகின்றன. எனவே ஏரியின் கோடி வாய்க்கால்களை அகலப்படுத்தவும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. அப்போது திட்ட இயக்குனர் மணி, தாசில்தார் பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் திருமலை, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாப்பாத்திநடராஜன், கோவிந்தம்மாள், ஒன்றிய கவுன்சிலர் அம்பிகாவீரமணி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள் மணிகண்டன், புஷ்பா மற்றும் கதிரவன், மணிகண்டன் உடன் இருந்தனர். தொடர்ந்து ஆருர் ஏரியையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Next Story