விக்கிரவாண்டி அருகே ஏரி மதகில் தவறி விழுந்த தொழிலாளி பலி


விக்கிரவாண்டி அருகே ஏரி மதகில் தவறி விழுந்த தொழிலாளி பலி
x
தினத்தந்தி 10 Nov 2021 11:00 PM IST (Updated: 10 Nov 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் விசாரணை

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் அருண் (வயது 34), அடைக்கலாபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அருண் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டார். அப்போது அதேஊரில் உள்ள சிறிய ஏரி வழியாக நடந்து சென்றபோது தவறி, ஏரி மதகு மீது விழுந்து விட்டார். இதில் பலத்த காயமடைந்து மயங்கிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அருண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story