மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திருத்துறைப்பூண்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ்குமார் நேரில் ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளாக 211 கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ்குமார் நேரில் ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளாக 211 கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வு
திருத்துறைப்பூண்டி பகுதியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அரசு செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கிர்லோஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தேங்கி உள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையிலும், விவசாய நெற்பயிர்களை பாதுகாக்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
211 பகுதிகள் கணக்கெடுப்பு
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் மிக அதிகம் பாதிப்படையக்கூடியது மற்றும் அதிகமாக பாதிப்படையக்கூடியது 55, மிதமாக பாதிப்படையக்கூடியது 82, குறைவாக பாதிப்படையக்கூடியது 74 என 211 பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து பகுதிகளிலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளோம். இப்பகுதிகள் தொடர் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story