வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர், தாலுகா அலுவலகங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
தமிழக சட்டசபை தேர்தலுக்கு செலவு செய்த தொகையை உடனே ஒதுக்க வேண்டும். மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும், வாக்காளர் பட்டியல் பணிக்கு சிறப்பு பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகிறது. மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் பணிகளை புறக்கணிக்க போவதாகவும் அறிவித்தனர்.
இதற்கிடையே நேற்று மாநிலம் முழுவதும் கோரிக்கை அட்டைகளை அணிந்து வருவாய்த்துறை அலுவலர்கள் பணியாற்றினர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை அணிந்து வேலை செய்தனர். மேலும் மாலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.இதற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் விஜயராகவன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் ஜான்பாஸ்டின் டல்லஸ், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிளை தலைவர் உஷா தலைமையில் மாவட்ட துணை தலைவர் மகாராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story