வேலகவுண்டம்பட்டி அருகே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் தொழிலாளி தற்கொலை


வேலகவுண்டம்பட்டி அருகே மனைவி பிரிந்து சென்ற வேதனையில்  தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 11 Nov 2021 12:14 AM IST (Updated: 11 Nov 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

வேலகவுண்டம்பட்டி அருகே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பரமத்திவேலூர்:
வேலகவுண்டம்பட்டி அருகே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி பிரிந்து சென்றார்
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூர் ரோடு சின்னத்தம்பி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகன் சக்திவேல் (வயது 28), கூலித்தொழிலாளி. இவருக்கும், மீனா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. 
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீனா தனது கணவருடன் கோபித்துக்கொண்டு தூத்துக்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
தற்கொலை
இதன்காரணமாக வீட்டில் தனியாக வசித்து வந்த சக்திவேல் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை நீண்டநேரமாகியும், சக்திவேல் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு சக்திவேல் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். 
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சக்திவேலின் உடலை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும் சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story