அரக்கோணம் பகுதியில் வீடுகள் இடிந்து சேதம்
அரக்கோணம் பகுதியில் வீடுகள் இடிந்து சேதம்
அரக்கோணம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.அரக்கோணம் மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் மழை பெய்து வருகிறது. அரக்கோணம் சத்தியவாணி முத்துநகர் 1-வது தெருவைச் சேர்ந்த லலிதா, அரக்கோணத்தை அடுத்த சோகனூர் கிராமம் ஆதிதிராவிடர் பகுதி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மனோகரன் ஆகியோரின் கூரை வீடுகளின் ஒரு பக்கம் சுவர் இடிந்து விழுந்தது.
இச்சிபுத்தூர் மதுரா பெரிய ஈசலாபுரத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருடைய வீட்டின் ஒருபக்க கூரை பகுதியில் சேதமடைந்தது. மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனக் கிராம மக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story