ஜோலார்பேட்டை அருகே ஏ.டி.எம். மையத்தில் ரூ.4 லட்சத்தை விட்டு சென்ற ஊழியர்கள்


ஜோலார்பேட்டை அருகே ஏ.டி.எம். மையத்தில் ரூ.4 லட்சத்தை விட்டு சென்ற ஊழியர்கள்
x
தினத்தந்தி 11 Nov 2021 12:33 AM IST (Updated: 11 Nov 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம். மையத்தில் ரூ.4 லட்சத்தை விட்டு சென்ற ஊழியர்கள்

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் தாமேலேரிமுத்தூர் பகுதியில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று மாலை பணம் நிரப்பப்பட்டது. பணம் நிரப்பிய ஊழியர்கள் கவனக்குறைவாக பணத்துடன் ஒரு பையை அங்கேயே விட்டு விட்டு சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் வெற்றிக்குமார் என்ற வாலிபர் அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது ஏ.டி.எம். மையத்தில் இருந்த பையை பார்த்தபோது அதில் பணம் இருந்தது.
உடனே அந்த பணத்தை எடுத்துச்சென்று கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். அந்தப்பையில் ரூ.4 லட்சம் இருந்தது தெரியவந்தது. பணத்தை ஒப்படைத்த வாலிபருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

Next Story