போளூர் அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவனும் சாவு
போளூர் அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் இறந்தார். இதனால் உறவினர்கள், கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
போளூர்
போளூர் அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் இறந்தார். இதனால் உறவினர்கள், கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மனைவி சாவு
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த எழுவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மா.சுப்பிரமணியன் (வயது 90) விவசாயி. இவரது மனைவி லட்சுமி (82). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
லட்சுமி கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்தார். திடீரென்று இவர் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு இறந்து விட்டார். இதையடுத்து மாலையில் சுடுகாட்டில் அவரை தகனம் செய்து விட்டு அனைவரும் வீடு திரும்பினர்.
அதிர்ச்சியில் கணவரும் இறந்தார்
சற்று நேரத்தில் இரவு 8 மணி அளவில் மனைவி இறந்த அதிர்ச்சியில் துக்கம் தாங்காமல் இருந்த கணவர் சுப்பிரமணியன் இறந்து விட்டார். அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
மனைவி இறந்த அதிர்ச்சியில், கணவரும் இறந்த சம்பவத்தால் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Related Tags :
Next Story