மூதாட்டி கொலையில் தொழிலாளி கைது
கூடங்குளம் அருகே, மூதாட்டி கொலையில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கூடங்குளம்:
கூடங்குளம் அருகே, மூதாட்டி கொலையில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மூதாட்டி கொலை
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள திருவம்பலபுரத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மனைவி வள்ளியம்மாள் (வயது 90). இவர்களது மகன் மாடசாமி, விவசாயி.
வேலாயுதம் ஏற்கனவே இறந்து விட்டார். வள்ளியம்மாள் தனது மகன் மாடசாமியுடன் வசித்து வந்தார். மாடசாமி வீட்டு வளாகத்தில் உள்ள ஒரு அறையில் வள்ளியம்மாள் குடியிருந்தார். இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி இரவு வள்ளியம்மாள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தொழிலாளி கைது
இதுகுறித்து அவரது மகன் மாடசாமி கொடுத்த புகாரின் பேரில் கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அதே பகுதி வடக்கு தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான புரோஸ்கான் (40) என்பவர், வள்ளியம்மாளை கொலை செய்தது தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-
வாக்குமூலம்
நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் வேலை சரியில்லாத காரணத்தால் வள்ளியம்மாளிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தேன். தற்போது வட்டியை கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. எனவே வட்டியை கேட்டு அடிக்கடி வீட்டுக்கு வந்தார். நான், அவரை வீட்டிற்கு வர வேண்டாம். நானே வந்து கொடுத்து விடுவேன் என்றேன்.
ஆனால் சம்பவத்தன்று மீண்டும் எனது வீட்டுக்கு வள்ளியம்மாள் வந்தார். உடனடியாக வட்டியை தருமாறு கேட்டு, வீட்டை விட்டு வெளியே செல்ல மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், வள்ளியம்மாளை கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story