சூதாடிய 26 பேர் கைது


சூதாடிய 26 பேர் கைது
x
தினத்தந்தி 11 Nov 2021 1:07 AM IST (Updated: 11 Nov 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் சூதாடிய 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர், 
விருதுநகர் சாத்தூர் ரோட்டில் எட்டூர்வட்டம் சுங்கச்சாவடி அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் சூதாட்டம் நடப்பதாக வச்சக்காரப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்த மாரீஸ்வரக்கண்ணன் (வயது 42) என்பவர் ஒரு கட்டிடத்தை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து சூதாட்டம் நடத்த அனுமதித்தது தெரியவந்தது. அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்த கோவில்பட்டியை சேர்ந்த மாடக்கண்ணு (55), சாத்தூரை  சேர்ந்த பரமசிவம் (52), செல்வகுமார் (40), வேப்பிலைப்பட்டி சூசைப்பாண்டி (39), போட்டி ரெட்டியபட்டியை சேர்ந்த குருசாமி (36), சிவகாசியை சேர்ந்த ராமசாமி (42) உள்பட 19 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ. 33 ஆயிரத்து 145-ஐ பறிமுதல் செய்து மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோன்று பட்டம்புதூரில் இனாம் ரெட்டியபட்டியைச் சேர்ந்த கோபால் (55) என்பவர் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து சூதாட்டத்திற்கு அனுமதி கொடுத்தது தெரியவந்தது. அங்கு சென்று சோதனை நடத்திய போலீசார் அங்கு சூதாடிக் கொண்டிருந்த எட்டநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த கண்ணன் (43), சாத்தூரை சேர்ந்த மணிகண்டன் (32), திருத்தங்கல் ராஜ முனியசாமி (29), சிவகாசி ஜாகிர்உசேன் (51), பட்டம்புதூர் முனீஸ்வரன் (27), ஆவுடையாபுரம் யாசர் அராபத் (37) உள்பட 7 பேரை கைது செய்ததுடன், சூதாடிய ரூ.32 ஆயிரத்து 376-ஐ பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story