அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் வியாபாரி மின்சாரம் பாய்ந்து பலி
சோமரசம்பேட்டை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் வியாபாரி மின்சாரம் பாய்ந்து பலியானார்.
சோமரசம்பேட்டை
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள கோப்பு கீழத்தெருவை சேர்ந்தவர் வசந்தா (வயது 66). இவர் வாழைப்பழம் வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இப்பகுதியில் இடைவிடாது மழை பெய்தது. அப்போது, இரவில் அந்த பகுதியில் உள்ள மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக தெருவில் மின் விளக்குகள் எரியாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இதை அறியாத வசந்தா இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, அந்த மின்கம்பியில் மிதித்துள்ளார். இதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வசந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story