இடையன்குளம் கண்மாய் நிரம்பியது


இடையன்குளம் கண்மாய் நிரம்பியது
x
தினத்தந்தி 11 Nov 2021 1:17 AM IST (Updated: 11 Nov 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெய்த தொடர்மழையினால் இடையன்குளம் கண்மாய் நிரம்பியது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெய்த தொடர்மழையினால் இடையன்குளம் கண்மாய் நிரம்பியது. 
தொடர்மழை 
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவை பொறுத்தவரை பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 30 கண்மாய் மற்றும் குளங்கள் உள்ளன. ஊராட்சிகளுக்கு சொந்தமான 60 கண்மாய் மற்றும் குளங்கள் உள்ளன. இவ்வாறு மொத்தம் 90 கண்மாய், குளங்கள் உள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அடிவாரத்தில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அதிகாரிகள் ஆய்வு 
 அந்த வகையில் 90 கண்மாய் மற்றும் குளங்களில் முதலாவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இடையன்குளம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது.
இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் ராமசுப்பு, துணை வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். 

Next Story