மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் மாயனூர் கதவணை வந்தடைந்தது


மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் மாயனூர் கதவணை வந்தடைந்தது
x
தினத்தந்தி 11 Nov 2021 1:18 AM IST (Updated: 11 Nov 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட காவிரி தண்ணீர் மாயனூர் கதவணைக்கு நேற்று அதிகாலை வந்து சேர்ந்தது.

கிருஷ்ணராயபுரம், 
மேட்டூர் அணை
கர்நாடகாவின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு நேற்று அதிகாலை வந்து சேர்ந்தது.
மாயனூர் கதவணை
அதேபோல் அமராவதி, பவானி, நொய்யல் போன்ற ஆறுகளில் இருந்து தண்ணீர் காவிரியில் கலந்து வருகிறது. இதனால் மாயனூர் கதவணை வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 38 ஆயிரத்து 387 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. 
இந்த தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரியில் திறக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story