காதல் திருமணம் செய்தவர் தற்கொலை
காதல் திருமணம் செய்தவர் தற்கொலை செய்து கொண்டார்
வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியை சேர்ந்தவர் மதன் (வயது 23). இவரது மனைவி ஷாலினி (21). இவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 5-ந் தேதி விஷத்தை தின்று விட்டு மதன் வீட்டில் மயங்கி கிடந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story