ஏற்காடு- குப்பனூர் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு அனுமதி


ஏற்காடு- குப்பனூர் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு அனுமதி
x
தினத்தந்தி 11 Nov 2021 1:29 AM IST (Updated: 11 Nov 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காடு- குப்பனூர் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு அனுமதி

ஏற்காடு, நவ.11-
ஏற்காடு- குப்பனூர் மலைப்பாதையில் போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மண் சரிவு சரிசெய்யப்பட்டதால் கலெக்டர் கார்மேகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
குப்பனூர் மலைப்பாதை
ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4-ந் தேதி கனமழை பெய்தது. இந்த மழையால் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடைபட்டது.
இதையடுத்து அதிகாரிகள் மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவை சீரமைக்கும் பணியை முடுக்கி விட்டனர். 5 நாட்களாக நடந்து வந்த சீரமைப்பு பணி கடந்த 7-ந் தேதி நிறைவடைந்தது. ஆனால் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
அதிகாரிகள் ஆய்வு
இதற்கிடையே சேலம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சிவசண்முகராஜா, கலெக்டர் கார்மேகம் ஆகியோர் மண்சரிவு சரிசெய்யப்பட்ட குப்பனூர் மலைப்பாதையை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள பணிகள் குறித்து கண்காணிப்பு அதிகாரி சண்முகராஜா கேட்டறிந்தார்.
அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சண்முகராஜா, கலெக்டர் கார்மேகம் ஆகியோர் ஏற்காடு படகு இல்லம் தூர்வாரும் பணியை பார்வையிட்டனர்.
போக்குவரத்துக்கு அனுமதி
இதற்கிடையே ஏற்காடு- குப்பனூர் மலைப்பாதையில் கனரக வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த சாலையில் வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில்தான் செல்லவேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Next Story