விருதுநகரில் இருந்து 3 பயணிகளுடன் காரைக்குடிக்கு புறப்பட்ட சிறப்பு ெரயில்
காரைக்குடிக்கு புறப்பட்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்க விருதுநகரில் இருந்து வெறும் 3 பயணிகள் மட்டுமே ஏறினர்.
விருதுநகர்,
காரைக்குடிக்கு புறப்பட்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்க விருதுநகரில் இருந்து வெறும் 3 பயணிகள் மட்டுமே ஏறினர்.
சிறப்பு ரெயில்
விருதுநகரில் இருந்து காரைக்குடி வரையிலான சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில் (எண்06886) நேற்று முதல் இயக்கப்பட்டது. நேற்று காலை 6.20 மணிக்கு விருதுநகரில் இருந்து இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில் புறப்பட்டது. காலை 9.35 மணிக்கு காரைக்குடி சென்று அடைந்தது. மொத்தம் 6 பெட்டிகள் இணைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் மற்றும் 2 ஆண் பயணிகள் என மொத்தம் 3 பயணிகள் மட்டுமே விருதுநகரில் இருந்து நேற்று பயணத்தை தொடங்கினர். ெரயில்வே ஊழியர்கள் 4 பேரையும் சேர்த்து மொத்தம் 7 பேர் இந்த ெரயிலில் சென்றனர்.
கூடுதல் கட்டணம்
கொரோனா பாதிப்பு காலத்திற்கு முன்பு சாதாரண கட்டணத்தில் இந்த ெரயில் இயக்கப்பட்டு வந்த போது அரசு அலுவலர்களும், சிறுவணிகர்களும் இந்த ெரயிலை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் தற்போது சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் இந்த ெரயிலில் பயணிக்க மக்கள் ஆர்வம் காட்டாத நிலை ஏற்பட்டு்ள்ளது.
ெரயில்வே நிர்வாகம், அனைத்து ெரயில்களையும் படிப்படியாக இயக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சாதாரண கட்டணத்தில் ெரயில்களை இயக்காமல் கூடுதல் கட்டணத்தில் இயக்குவதால் ஏழை, எளிய மக்கள் பயன்பெறமுடியாத நிலையும் உள்ளது. எனவே சாதாரண கட்டணத்தில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக வியாபாரிகள் சிலர் கூறுகையில், “நாங்கள் முன்பு இந்த ரெயிலை பயன்படுத்தினோம். அப்போது முன்பு இதே ரெயிலில் விருதுநகரில் இருந்து காரைக்குடிக்கு செல்ல ரூ.30 வசூலித்தனர். இந்த தடத்தில் உள்ள மற்ற ஊர்களுக்கு செல்லவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டது. ஆனால் நேற்று முதல் இரு மடங்காக காரைக்குடிக்கு ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த ரெயில் இயக்கப்பட்டதால் நிறைய பேருக்கு தெரியாமல் இருந்தது. வரும் நாட்களில் கட்டணத்தை குறைத்தால் நிறைய பேர் ஆர்வத்துடன் பயணம் செய்வர்” என்றனர்.
Related Tags :
Next Story