தனியார் பஸ் டிரைவரிடம் விதிகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்திய கலெக்டர்
ஒரத்தநாட்டில் சீருடை அணியாத தனியார் பஸ் டிரைவரிடம் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தினார்
ஒரத்தநாடு;
ஒரத்தநாட்டில் சீருடை அணியாத தனியார் பஸ் டிரைவரிடம் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தினார்
கலெக்டர் திடீர் நடவடிக்கை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக டான்சி நிர்வாக இயக்குனரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான எஸ். விஜயகுமார், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று காலை பாப்பாநாடு சென்றனர். அப்போது அதிகாரிகளுடன் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திடீரென சாலையில் வந்த ஒரு தனியார் பஸ்சை நிறுத்தி, சீருடை அணியாமல் இருந்த டிரைவரிடம் ஏன்? சீருடை அணியவில்லை? என கேட்டு அவரது ஓட்டுனர் உரிமத்தையும் கேட்டார்
டிரைவரிடம் அறிவுறுத்தல்
அப்போது சீருடை அணிந்து உரிய போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்குமாறு சம்பந்தப்பட்ட டிரைவரிடம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில், சீருடை அணியாமல் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமாலும் தனியார் பஸ்சை இயக்கிய டிரைவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story