தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 Nov 2021 2:38 AM IST (Updated: 11 Nov 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

வியாபாரிகள் அவதி
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தேரேகால்புதூரில் அப்டா மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வாகனங்களில் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையில் மார்க்கெட்டின் முன் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியமாக காணப்படுகிறது. இதனால், அங்கு வாகனங்களில் வரும் வியாபாரிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                      -தமிழரசு, ஆரல்வாய்மொழி.
மின்கம்பம் மாற்றப்படுமா?
வெள்ளிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட அம்மாண்டிவிளை சந்திப்பில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதி துருபிடித்து உள்ளதால் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் கீழே சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
                                -லிங்கத்துரை, அம்மாண்டிவிளை.
குளம்போல் தேங்கி நிற்கும் தண்ணீர்
திக்குறிச்சியில் இருந்து வள்ளக்கடவு வழியாக சிதறால் செல்லும் சாலை உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வடிகால் வசதி இல்லாத இந்த சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், துர்நாற்றும் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, வடிகால் வசதியை ஏற்படுத்தி மழைநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கு வேண்டும். 
                                         -ஆர்.ராஜதாஸ், ஆற்றூர்.
எரியாத மின்விளக்குகள்
கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளையம்பலம் சந்திப்பில் இருந்து வேங்கோடு செல்லும் சாலை திருப்பம் வரை உள்ள மின் கம்பங்களில் விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ெபரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய மின்விளக்குகள் அமைத்து எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                            -அஸ்வின், கிள்ளியூர்.
விபத்து அபாயம்
நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா பஸ்நிலைய நுழைவு வாயலில் சாலை சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை நேரத்தில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்.
         -எட்வின் சார்லஸ், 
பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை.
சாலையை சீரமைக்க வேண்டும்
குளச்சலில் இருந்து ஆலஞ்சி, மிடாலம், இனயம் வழியாக தேங்காப்பட்டணத்துக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த வழித்தடத்தில் 5பி, 5எம், 301, 302 எண்கள் கொண்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சாலையில் மிடாலம் சந்திப்பில் இருந்து இனயம் ஹெலன் நகர் வரை சேதமடைந்து தார் சாலை என்பதற்கான அறிகுறியே இல்லாமல் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                           -எஸ்.ஹாமீம், இனயம்.
சேதமடைந்த மின்கம்பங்கள்
நாகர்கோவிலில் இருந்து ஈத்தாமொழி செல்லும் சாலையில் மறவன்குடியிருப்பு சந்திப்பு பகுதியில் நல்மன மாதா குருசடி உள்ளது. இந்த குருசடியின் எதிரே செல்லும் சாலையில் உள்ள எம்.கே.2 எப்.1-79, எம்.கே.எப்.2-292 ஆகிய 2 மின்கம்பங்கள் சேதமடைந்து சாரிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கிறார்கள். எனேவ, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 2 மின்கம்பதையும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                         -மைக்கேல் சிகாமணி, மறவன்குடியிருப்பு.






Next Story