சாலை சீரமைக்கப்படுமா
சாலை சீரமைக்கப்படுமா
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் முத்துபேட்டை மெயின் சாலையில் மயில் பாளையம் தெரு உள்ளது. இந்த தெருவில் இருந்து எல்.ஐ.சி. அலுவலகம் திரும்பும் இடத்தில் சாலை முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-ரவிச்சந்திரன், பொன்னவராயன் கோட்டை.
தஞ்சை மாரியம்மன் கோவில் சாலையில் முனிசிபல் காலனி 2 வது நகர் உள்ளது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தபகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குப்பைத்தொட்டிகள் இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டி விடுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு,நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள சாலை நீண்ட நாட்களாக மண் சாலையாகவே உள்ளது. மழைக்காலங்களில் சாலை சேறும்,சகதியுமாக காட்சி அளிக்கிறது. சாலை சேறும், சகதியுமாக இருப்பதாலும், குப்பைகள் துர்நாற்றம் வீசுவதாலும் அந்த வழியாக செல்லும் மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைவசதி ஏற்படுத்தி தருவதோடு மட்டுமல்லாமல் குப்பைத்தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் .
தஞ்சை நாகை சாலையில் ஞானம் நகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள 2-வது தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள வடிகால்கள் முறையாக தூர்வாராமல் உள்ளன. இந்த நிலையில் தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாக வீடுகளை சுற்றிலும் சாலைகளிலும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக சென்று வர மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால்களை தூர்வாரி மழைநீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்
தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் பழைய வீட்டு வசதிவாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்பை சுற்றிலும் செடிகள், கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி, மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் சீரமைக்க படாமல் இருப்பதால் கழிவு நீர் தேங்கி காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடியிருப்பை சுற்றி உள்ள செடி கொடிகளை அகற்றிவிட்டு, கழிவு நீர் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Related Tags :
Next Story