ஊட்டியில் நிலவும் கடுங்குளிர்
ஊட்டியில் நிலவும் கடுங்குளிர்
ஊட்டி
ஊட்டியில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
கடுங்குளிர்
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை பெய்யாமல் பலத்த காற்று வீசியது. இதனால் கடுங்குளிர் நிலவியது. அதன் காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் குளிரை போக்க கம்பளி ஆடைகள், தொப்பி அணிந்து பூங்காவை கண்டு ரசித்தனர். கடுங்குளிரால் அவர்கள் அவதி அடைந்தனர். இதனால் நீண்ட நேரம் பூங்காவை ரசிக்க முடியாமல் திரும்பி சென்றனர்.
ஊட்டி-கோத்தகிரி சாலை, ஊட்டி-குன்னூர் சாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் எதிரே வந்த வாகனங்கள் தெரியவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகனங்களை இயக்கினர். மதியத்துக்கு மேல் ஊட்டியில் சாரல் மழை பெய்தது. மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். கடுங்குளிர் காரணமாக ஊட்டியில் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது.
மழையிலும் விவசாய பணி
தேயிலைத் தோட்டங்கள், விவசாய நிலங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மழையில் நனையாமல் இருக்க பிளாஸ்டிக் போர்வை அணிந்து களை எடுப்பது போன்ற விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாக சாலையோர மண் ஈரப்பதமாக உள்ளது. இதனால் ஆங்காங்கே விவசாய விளை நிலங்களில் இருந்து மண் சரிந்து சாலையில் படிந்து வருகின்றன. இதனால் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை அகற்றும் பணி நடந்து வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைப்பாதைகளில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை மிகவும் கவனத்துடன் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. வடகிழக்கு பருவமழை அதிகரிக்கக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கனமழையின் போது பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க அமைக்கப்பட்ட முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story