கூடலூரில் நெல் விளைச்சல் பாதிக்கும் அபாயம்
கூடலூரில் நெல் விளைச்சல் பாதிக்கும் அபாயம்
கூடலூர்
கூடலூர் பகுதியில் பரவலாக தொடர் மழை பெய்வதால் நெல் பயிர்கள் விளைச்சல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தொடர் மழை
கூடலூர் பகுதியில் தேயிலை, நேந்திரன் வாழை ஆண்டு முழுவதும் விளைகிறது. பருவமழை தொடங்கும் ஜூன் மாதம் முதல் இஞ்சி, நெல் உள்ளிட்ட பயிர்கள் நடவு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் புத்தூர் வயல், கம்மாத்தி, குனில் வயல், பாடந்தொரை மற்றும் முதுமலை ஊராட்சி பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்கள் விளைய தொடங்கி உள்ளது.
இதனால் உள்ளூர் மவுண்டாடன் செட்டி சமூகத்தினர் மற்றும் ஆதிவாசி மக்கள் பூ புத்தரி திருவிழா கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து விளைய தொடங்கி உள்ள நெற்கதிர்களை அறுவடை செய்து தங்களது குல தெய்வ கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாநிலம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கூடலூர் பகுதியிலும் பரவலாக தொடர் மழை பெய்கிறது.
நெல் விளைச்சல் பாதிக்கும் அபாயம்
மேலும் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் சீதோஷ்ன காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும் மழைக்கால நோய்களுக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் பரவலாக பெய்யும் தொடர் மழையால் நெல் பயிர்களின் விளைச்சல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
கூடலூரில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை 6 மாதங்கள் பெய்வது இயல்பு. ஆனால் நவம்பர் மாதம் தொடர் மழை பெய்வது கிடையாது. நடப்பு மாதத்தில் கூடலூர் பகுதியில் பரவலாக தொடர்ந்து மழை பெய்வதால் தற்போது விளைய தொடங்கியுள்ள நெற்கதிர்கள் உதிர்ந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் விளைச்சல் பாதிக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story