மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது


மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது
x
தினத்தந்தி 11 Nov 2021 5:23 PM IST (Updated: 11 Nov 2021 5:23 PM IST)
t-max-icont-min-icon

மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது

ஊட்டி

ஊட்டியில் பலத்த காற்றுடன் பெய்த சாரல் மழையால் மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பலத்த காற்று வீசியது

நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் நேற்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. 
ஊட்டி மத்திய பஸ் நிலைய மேல் பகுதியில் உள்ள எமரால்டு சாலையின் குறுக்கே மரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்தது. இதனால் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

போக்குவரத்து பாதிப்பு

தொடர்ந்து அரை மணிநேரத்திற்கு பின்னர் மரம் வெட்டப்பட்டு அகற்றப்பட்டது. அதன்பின்னர் போக்குவரத்து சீரானது. மரம் முறிந்து விழுந்ததால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மின்கம்பி சரிசெய்யப்பட்டு மின்இணைப்பு வழங்கப்பட்டது. நீலகிரியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். நேற்று ஊட்டி தீயணைப்பு நிலையத்தில் கோவை தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி சிறப்பு தளவாடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறும் போது, வடகிழக்கு பருவமழையின் போது இடர்ப்பாடுகள் ஏற்பட்டால் மீட்புதவி மற்றும் மரங்கள் விழுந்தால் அகற்ற தீயணைப்பு வீரர்கள் 60 பேர் தயார் நிலையில் உள்ளனர். ஆய்வின்போது நிலைய அலுவலர் பிரேமானந்தன் உடனிருந்தார்.

Next Story