கயத்தாறு அருகே போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்


கயத்தாறு அருகே போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
x
தினத்தந்தி 11 Nov 2021 6:19 PM IST (Updated: 11 Nov 2021 6:19 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

கயத்தாறு:
கயத்தாறு அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் மகன்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள காப்புலிங்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணதாஸ். இவர் நெல்லை ஆயுதப்படை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் செல்வராஜ் (வயது 26). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு, கயத்தாறில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
செல்வராஜ் மட்டும் தனது தந்தையின் சொந்த ஊரான காப்புலிங்கம்பட்டியில் இருந்தபடி வேலைக்கு சென்று வந்தார். அவரது குடும்பத்தினர் அனைவரும் நெல்லையில் வசித்து வருகின்றனர். 
தற்கொலை 
இந்த நிலையில் செல்வராஜ் நேற்று முன்தினம் இரவு திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
காரணம் என்ன?
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
போலீசார் விசாரணையில், செல்வராஜ் லேசாக கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி என்பதும், தனக்கு திருமணம் ஆகாததால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
சோகம்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
----

Next Story