கொசுக்கள் உற்பத்தி கூடாரமான இளநீர் கூடுகள்


கொசுக்கள் உற்பத்தி கூடாரமான இளநீர் கூடுகள்
x
தினத்தந்தி 11 Nov 2021 7:17 PM IST (Updated: 11 Nov 2021 7:17 PM IST)
t-max-icont-min-icon

பழனி நகரில் கொசுக்கள் உற்பத்தி கூடாரமாக இளநீர் கூடுகள் உள்ளன.

பழனி:

பழனி நகர் மற்றும் அடிவாரத்தில் ஏராளமான இளநீர் கடைகள் உள்ளன. இங்கு மீதமாகும் இளநீர் கூடுகளை பழனியில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் பைபாஸ் சாலையோரத்தில் கொட்டி செல்கின்றனர். 

இதேபோல் பழனி தெற்கு கிரிவீதியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையோரத்தில் இளநீர் கூடுகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. பழனி பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால்  இளநீர் கூடுகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. 

இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் சூழல் உருவாகி உள்ளது. எனவே கொசுக்களின் உற்பத்தி கூடாரமாக திகழும் இளநீர் கூடுகளை அப்புறப்படுத்த, பழனி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story