மலைக்கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்


மலைக்கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 11 Nov 2021 7:26 PM IST (Updated: 11 Nov 2021 7:26 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே மலைக்கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன.

பெரும்பாறை:

பெரும்பாறை அருகே உள்ள பெரியூர், பள்ளத்து கால்வாய், மல்லியபாறை, கவுச்சிக்கொம்பு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த 4 நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவை அப்பகுதிகளில் உள்ள காபி தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. முள்வேலியை உடைத்து தோட்டத்துக்குள் நுழையும் காட்டு யானைகள் வாழை, காபி, ஆரஞ்சு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின. 

அதன்படி நேற்று முன்தினம் இரவு ஒற்றை யானை,  பெரியூர் ஊராட்சி பள்ளத்துக்கால்வாய் பகுதியில் உலா வந்தது. பின்னர் பள்ளத்துகால்வாயை சேர்ந்த விவசாயி கேசவமூர்த்தி என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்து வாழை, காபி, ஆரஞ்சு ஆகிய பயிர்களை சேதப்படுத்தின. மலைக்கிராமங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கதையாகி விட்டது. 

எனவே அந்த காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story