பொம்மிடி அருகே விபத்தில் லாரி டிரைவர் பலி


பொம்மிடி அருகே விபத்தில் லாரி டிரைவர் பலி
x
தினத்தந்தி 11 Nov 2021 8:56 PM IST (Updated: 11 Nov 2021 8:56 PM IST)
t-max-icont-min-icon

பொம்மிடி அருகே விபத்தில் லாரி டிரைவர் பலியானார்.

பொம்மிடி:
பொம்மிடி அருகே உள்ளன பையர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் புவியரசு (வயது 28), லாரி டிரைவர். இவர் நேற்று இரவு வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் பொம்மிடி நோக்கி சென்றார். அப்போது நடூரை அடுத்த தனியார் திருமண மண்டபம் எதிரில் பொம்மிடியில் இருந்து துறிஞ்சிபட்டி நோக்கி வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் புவியரசு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானர். இந்த விபத்து குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story