ஓசூர் சிப்காட்டில் தனியார் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் பொருட்கள் திருட்டு-மர்ம நபர்கள் கைவரிசை


ஓசூர் சிப்காட்டில் தனியார் நிறுவனத்தில்  ரூ.20 லட்சம் பொருட்கள் திருட்டு-மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 11 Nov 2021 9:17 PM IST (Updated: 11 Nov 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் சிப்காட்டில் தனியார் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூர்:
ஓசூர் சிப்காட்டில் தனியார் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரூ.20 லட்சம் பொருட்கள் திருட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் சின்ன எலசகிரி பால விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 52). இவர் ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருந்து வருகிறார். 
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு மர்ம நபர்கள் இவரது நிறுவனத்தின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அவர்கள் உள்ளே இருந்த 48 ஆயிரத்து 594 மீட்டர் காப்பர் வயர்கள், 200 கிலோ இரும்பு பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் என மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்றனர்.
போலீசார் விசாரணை
இந்த நிலையில், நிறுவனத்தில் பொருட்கள் திருடப்பட்டிருப்பதை கண்டு சிவக்குமார் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். 
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். அதில் 5 கைரேகைகளை போலீசார் அங்கிருந்து பதிவு செய்து கொண்டனர். 
எனவே இந்த திருட்டில் 5 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 
இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story