கம்பம் அருகே மாவிளக்குடன் பெண்கள் சாலைமறியல்
கம்பம் அருகே மாவிளக்குடன் பெண்கள் சாலைமறியல் செய்தனர்.
உத்தமபாளையம்:
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் ஒரு பிரிவினருக்கு சொந்தமான முத்தாலம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு இந்த கோவில் திருவிழாவின்போது பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக அங்குள்ள மின்வாரிய அலுவலக வீதியில் சென்றனர். அப்போது மற்றொரு பிரிவினர் கொட்டு, மேளம் இல்லாமல் அமைதியாக ஊர்வலம் செல்ல வேண்டும் என்று கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலத்தில் வந்த பெண்கள் அங்குள்ள ராயப்பன்பட்டி-சுருளி அருவி செல்லும் சாலையில் மாவிளக்குகளை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் மின்வாரிய அலுவலக வீதியில் கொட்டு, மேளத்துடன் பெண்கள் மாவிளக்குடன் ஊர்வலமாக சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story