காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுப்பு


காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுப்பு
x
தினத்தந்தி 11 Nov 2021 10:26 PM IST (Updated: 11 Nov 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம், 

உளுந்தூர்பேட்டை தாலுகா கொரட்டூரை சேர்ந்தவர் வீரப்பன் மகன் ஸ்ரீராம் (வயது 23). இவரும், கண்டாச்சிபுரம் தாலுகா வீரமடை கிராமத்தை சேர்ந்த 20 வயதுடைய பெண்ணும் கடந்த 2½ ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி காதலியுடன் பலமுறை ஸ்ரீராம் உல்லாசம் அனுபவித்ததால் அந்த பெண், 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அவர், ஸ்ரீராமிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீராமை கைது செய்தனர்.

Next Story