கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்று அதிகாலை வரை பெய்தது. பின்னர் பகல் 12 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மழையானது மாலை 4 மணி வரை விட்டு விட்டு பெய்தது. இதேபோல் கல்வராயன்மலை, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சங்கராபுரம் அருகே தியாகராஜபுரம் ஏரி உள்பட பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. மேலும் பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்து வருகின்றது.
Related Tags :
Next Story