மீனவர்களுக்கு மழைக்கால நிவாரண உதவித்தொகை
மீனவர்களுக்கான மழைக்கால நிவாரணத்தொகை வருகிற 15-ந்தேதி முதல் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.
புதுச்சேரி, நவ.
மீனவர்களுக்கான மழைக்கால நிவாரணத்தொகை வருகிற 15-ந்தேதி முதல் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.
புதுவை மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மழைக்கால நிவாரணம்
புதுவை மாநிலத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு மிகவும் துயரத்தில் உள்ளனர். இந்த நிலையில் அவர்களது துயர் துடைக்கும் பொருட்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரணம் ரூ.2,500 வழங்கப்பட உள்ளது.
வங்கிக்கணக்கில்...
இந்த தொகை சுமார் 18 ஆயிரத்து 200 குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் மத்திய அரசின் பிரதம மந்திரி மட்சிய சம்பட யோஜனாவின் வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உதவி அளித்தல் என்ற திட்டத்தின்கீழ் சுமார் 13 ஆயிரத்து 65 மீனவர்களுக்கு தலா ரூ.4,500 வீதம் முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி வருகிற 15-ந்தேதி முதல் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். முதல்-அமைச்சர் ரங்கசாமி வருகிற 15-ந்தேதி இதனை தொடங்கி வைப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story