கரூர் ரெயில் நிலையத்தை பயணிகள் கமிட்டி குழுவினர் ஆய்வு
கரூர் ரெயில் நிலையத்தை பயணிகள் கமிட்டி குழுவினர் ஆய்வு செய்தனர்.
கரூர்
கரூர் ரெயில் நிலையத்தில் நேற்று பா.ஜ.க. மாநில பட்டியல் அணி தலைவரும், ரெயில்வே பயணிகள் கமிட்டி உறுப்பினருமான பொன்.பாலகணபதி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த குழுவினர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளனவா என்றும், சி.சி.டி.வி.கண்காணிப்பு அறை, பயணிகள் தங்கும் அறை, நடைமேடை, கேண்டீன், கழிப்பிடங்கள், பார்சல், பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து ரெயில் நிலையத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். இதில் கரூர் மாவட்ட பா.ஜ.க. தொழிற்பிரிவு தலைவர் ஆர்.வி.எஸ்.செல்வராஜ், பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் குப்புராவ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story