பலத்த மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாளையும் (வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story