திருப்பத்தூர் அருகே 100 க்கும் மேற்பட்டோர் முகாமில் தங்கவைப்பு


திருப்பத்தூர் அருகே 100 க்கும் மேற்பட்டோர் முகாமில் தங்கவைப்பு
x
தினத்தந்தி 12 Nov 2021 12:00 AM IST (Updated: 12 Nov 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே ஏரி நிரம்பி ஊருக்கு தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட 100-க்கணக்கானவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே ஏரி நிரம்பி ஊருக்கு தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட 100-க்கணக்கானவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

முகாம்களில் தங்கவைப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதன்காரணமாக மழைநீர் தாழ்வான பகுதிகளில் பெருக்கெடுத்து ஒடியது. சில பகுதிகளில் கழிவுநீரும், மழைநீரும் சேர்ந்து ஓடியதால் சில இடங்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வாணியம்பாடி பகுதியில் எங்கு பார்த்தாலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இடைவிடாது மழை பெய்ததால் நேற்று மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.  பொதுமக்கள் யாரும் விட்டை விட்டு வெளியே வரவில்லை. திருப்பத்தூர் நகரில் இரவு 7 மணிக்கு மேல் பலத்த மழை கொட்டியது. திருப்பத்தூர் அருகே ஆதியூர் ஏரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மக்கள் அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். 

அத்தியாவசிய பொருட்கள்

அவர்களுக்கு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி எஸ்.ஜவஹர், மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆகியேர் உணவு மற்றும் அத்தியாவிசிய பொருட்களை வழங்கினர். சப்-கலெக்டர் பானு, தாசில்தார் சிவப்பிரகாசம் ஆகியோர் உடன் இருந்தனர்.



Next Story