அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி


அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி
x
தினத்தந்தி 12 Nov 2021 12:23 AM IST (Updated: 12 Nov 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி

விருதுநகர்
75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ-மாணவியருக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது. தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்ற தலைப்பில் நடந்த இந்த ஓவியப் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பிரிவில் பரிசு பெற்ற மாணவர் விவரம் வருமாறு:- 
முதல் பரிசு ஜனனி மி.ஏ.சி.ஆர். அம்மணி அம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி ராஜபாளையம், இரண்டாவது பரிசு அழகுராஜா சின்மயா வித்யாலயா ராஜபாளையம், மூன்றாம் பரிசு மொகிந்தா செண்பக விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிவகாசி, 9 மற்றும் 10ம் வகுப்புபிரிவு- முதல் பரிசு யுவன் சங்கர் தேவாங்கர் மேல்நிலைப் பள்ளி அருப்புக்கோட்டை, இரண்டாம் பரிசு தரணி ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி தளவாய்புரம், மூன்றாம் பரிசு ஜெகதீஷ் மாரி முத்து நாடார் மேல்நிலைப்பள்ளி தளவாய்புரம், பிளஸ்1 மற்றும் பிளஸ்2பிரிவு- முதல் பரிசு ஆர் கவிதா எஸ் ஹெச்.என்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிவகாசி, இரண்டாம் பரிசு வைஷ்ணவி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அனுப்பங்குளம், மூன்றாம் பரிசு ஜெயலட்சுமி டி.பி.என்.எம். நகராட்சி மேல்நிலைப்பள்ளி விருதுநகர் பரிசு பெற்றவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி பரிசுகளை வழங்கினார் போட்டிக்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக காப்பாளர் கிருஷ்ணம்மாள் செய்திருந்தார்.

Next Story