சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சாகும்வரை சிறை


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சாகும்வரை சிறை
x
தினத்தந்தி 12 Nov 2021 12:23 AM IST (Updated: 12 Nov 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும் அவருடைய நண்பர்கள் 2 பேருக்கும் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

ஸ்ரீவில்லிபுத்தூர்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும் அவருடைய நண்பர்கள் 2 பேருக்கும் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுமி பலாத்காரம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள சத்திரப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வளர்மணி(வயது 22). கூலி தொழிலாளி. இவர் ஒரு 13 வயது பள்ளிக்கூட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 
வளர்மணியின் நண்பர்களான ஆனந்த ராமலிங்க குமார்(23), வினோத் குமார்(22) ஆகிய 2 பேரும் அதே மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.
இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வந்தது. 
சாகும்வரை சிறை 
வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், கூலித்தொழிலாளி வளர்மணிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.  அவரது நண்பர்கள் ஆனந்த ராமலிங்க குமார், வினோத் குமார் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். ேமலும் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்தார்.

Next Story