நீர்பிடிப்பு பகுதிகள், கண்மாய்களை தொடர்ந்து கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை


நீர்பிடிப்பு பகுதிகள், கண்மாய்களை தொடர்ந்து கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை
x

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக நீர்பிடிப்பு பகுதிகள், கண்மாய்களை தொடர்ந்து கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அதிகாரி காமராஜ் கூறினார்.

விருதுநகர்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக நீர்பிடிப்பு பகுதிகள், கண்மாய்களை தொடர்ந்து கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அதிகாரி காமராஜ் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் கண்காணிப்பு அதிகாரி காமராஜ் தலைமையில் கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில் நடைபெற்றது.  அப்போது மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் பெய்த மழை அளவு குறித்தும், பெரியாறு, கோவிலாறு, சாஸ்தாகோவில், கோல்வார்பட்டி, வெம்பக்கோட்டை, ஆனைக்குட்டம், குல்லூர்சந்தை, இருக்கன்குடி ஆகிய அணைகளில் உள்ள நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து குறித்தும் அதிகாரிகளிடம் கண்காணிப்பு அதிகாரி காமராஜ் கேட்டறிந்தார். 
பின்னர் அவர் பேசும்போது, அனைத்து நீர்பிடிப்பு பகுதிகள், கண்மாய்கள் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் மழையினால் சேதமடைந்த சாலைகள் மற்றும் சிறுபாலங்களை தொடர்ந்து கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறும் அறிவுறுத்தினார். 
மழைக்காலத்தில் பரவும் நோய்களை தடுப்பதற்கு ஏதுவாக தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அதனை உடனடியாக அகற்ற வேண்டும்.
நிவாரண உதவி
மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் தாமதமின்றி வழங்க வேண்டும். மழைக்காலங்களில் நோய்த்தொற்று, டெங்கு போன்றவை பரவாமல் தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், திட்ட இயக்குனர் திலகவதி, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் தெய்வேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story