30 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்
30 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டரை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட இலவச ஸ்கூட்டர் சைக்கிள் வழங்கும் விழா சிவகங்கையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. .தமிழரசி முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கதிர்வேல் வரவேற்று பேசினார்.
விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு 30 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட இலவச ஸ்கூட்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, நகர் செயலாளர் துரைஆனந்த், ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், கண்டாங்கிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் மந்தக்காளை, கேப்டன் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story