தனியார் நிதி நிறுவனம் முன்பு விஷம் குடித்த தொழிலாளி சாவு
வள்ளியூரில் தனியார் நிதி நிறுவனம் முன்பு விஷம் குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
வள்ளியூர்:
வள்ளியூரில் தனியார் நிதி நிறுவனம் முன்பு விஷம் குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் அருகே உள்ள சீலாத்திகுளத்தை சேர்ந்தவர் விஜயன் மகன் தினேஷ் (வயது 29). கூலித்தொழிலாளி.
இவர் வள்ளியூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மாத தவணையில் கடன் பெற்று மொபட் வாங்கி உள்ளார்.
இந்த நிலையில் தவணை தொகையை தினேஷ் சரிவர செலுத்தாததால் அவரது மொபட்டை நிதி நிறுவன ஊழியர்கள் எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
விஷம் குடித்து தற்கொலை
இதனால் மன உளைச்சல் அடைந்த தினேஷ் நேற்று முன்தினம் வள்ளியூர் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனம் முன்பு விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தவணை தொகையை சரிவர செலுத்தாததற்கு மொபட்டை எடுத்து சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story