நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை


நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை
x
தினத்தந்தி 12 Nov 2021 1:13 AM IST (Updated: 12 Nov 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் 80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் 80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

பரவலாக மழை

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடித்து வருகிறது. நேற்று அதிகாலையில் பரவலாக மழை பெய்தது.

நெல்லை, பாளையங்கோட்டை பகுதியில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் மூலைக்கரைப்பட்டி பகுதியில் அதிகபட்சமாக 80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நெல்லையில் நேற்று பகலில் வெயில் அடித்தது.

அணைகள் நிலவரம்

அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் 135.50 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,395 கன அடியாகவும், வெளியேற்றம் 1,205 கன அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 140 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85.95 அடியாக உள்ளது. நீர்வரத்து 150 கன அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50 அடியாகவும், நீர்வரத்து 45 கன அடியாகவும் உள்ளது. அனையில் இருந்து பாசனத்துக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம் -13, சேர்வலாறு -10, நம்பியாறு -18, கொடுமுடியாறு -10, களக்காடு -2, மூைலக்கரைப்பட்டி -80, பாளையங்கோட்டை -6, நெல்லை -28.

Next Story