கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு


கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு
x
தினத்தந்தி 12 Nov 2021 2:06 AM IST (Updated: 12 Nov 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தார்

துறையூர்
துறையூரை அடுத்த புலிவலம் அருகே உள்ள நல்லவன்னிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி(வயது 34). விவசாயி. துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், ராமசாமியின் விவசாய கிணற்றில் உள்ள மோட்டார் தண்ணீரில் மூழ்கும் நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து அவர் கிணற்றில் இறங்கி மோட்டாரை மேலே தூக்க முயன்றபோது தவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்து அவரை மீட்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த ராசு(33) மற்றும் காமேஸ்வரன்(24) ஆகியோர் சுமார் 70 அடிக்கு மேல் ஆழம் கொண்ட அந்த கிணற்றுக்குள் இறங்கினர். அவர்கள், பலத்த காயத்துடன் இருந்த ராமசாமியை கயிறு கட்டி மீட்டு கிணற்றுக்கு மேலே அனுப்பினர். இதையடுத்து அங்கிருந்தவர்கள், அவரை சிகிச்சைக்காக துறையூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ராமசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராமசாமியின் அண்ணன் பெருமாள் கொடுத்த புகாரின்பேரில் புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கிணற்றுக்குள் இருந்து ராசு மற்றும் காமேஸ்வரன் ஆகியோர் வெளியே வர முடியாமல் தவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த துறையூர் தீயணைப்பு நிலைய அதிகாரி அறிவழகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று ராசு மற்றும் காமேஸ்வரனை கயிறு கட்டி கிணற்றுக்குள் இருந்து உயிருடன் மீட்டனர்.


Next Story