திருச்சி விமான நிலையத்தில் ரூ.22.61 லட்சம் தங்கம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் ரூ.22.61 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Nov 2021 2:10 AM IST (Updated: 12 Nov 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் ரூ.22.61 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது

செம்பட்டு
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 2 பயணிகள், தங்கத்தை தூளாக்கி பவுடர் டப்பாவில் கலந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.22.61 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story