ஒருவரை காதலிப்பதாக கூறி திருமணத்தை நிறுத்திய இளம்பெண்


ஒருவரை காதலிப்பதாக கூறி திருமணத்தை நிறுத்திய இளம்பெண்
x
தினத்தந்தி 12 Nov 2021 2:16 AM IST (Updated: 12 Nov 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் ஒருவரை காதலிப்பதாக கூறி இளம்பெண் திருமணத்தை நிறுத்தியதால் மனமுடைந்த தாய் விஷம் குடித்தார்.

திருச்சி
திருச்சி கிராப்பட்டி பாரதி மின்நகரை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மனைவி தங்கப்பொண்ணு (வயது 48). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், அவர் நேற்று முன்தினம் வேறொருவரை காதலிப்பதாக கூறி கடைசி நேரத்தில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் திருமணம் நின்று போனது.
 இதனால் மனமுடைந்த அவருடைய தாய் தங்கப்பொண்ணு வீட்டை விட்டு வெளியேறினார். அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
விஷம் குடித்த தாய் 
இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய 2-வது மகள் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் தனது தாயை காணவில்லை என்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் அவரை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தங்கப்பொண்ணு எலி மருந்தை(விஷம்) தின்று விட்டு வீடு திரும்பினார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story