மழை வெள்ளத்தில் சிக்கித்தவித்த குழந்தைகள், முதியோர்கள் உள்பட 430 பேர் மீட்பு
தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கித்தவித்த முதியோர்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 430 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழையையொட்டி, சென்னையில் ஏற்படுகிற இடர்பாட்டினை கையாள சென்னையில் உள்ள 42 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்களில் ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் நீர் இறைப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் கடந்த 4 நாட்களாக 156 குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீரை தீயணைப்பு வீரர்கள் பம்புகள் மூலம் வெளியேற்றியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கித்தவித்த முதியோர்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 430 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
97 இடங்களில் சாலையில் விழுந்த மரங்களை மின்விசை ரம்பங்கள் மூலம் அகற்றி உள்ளனர். அதேபோல் தீயணைப்பு வீரர்களால், 82 விலங்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. மேலும், 64 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள் அணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்தூர், பீர்க்கன்கரணை, வேளச்சேரி பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணி தீயணைப்பு வீரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story