மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச உபகரணங்கள்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச உபகரணங்கள்
கூடலூர்
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கூடலூர் ஒன்றியத்தில் உள்ள மாற்று திறனாளி மாணவர்களுக்கு இலவச உதவி உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வண்டிப் பேட்டையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் சண்முகம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி, பென்ணை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் கூடலூர் முழுவதிலும் உள்ள 39 மாற்று திறனாளி குழந்தைகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்றனர். சக்கர நாற்காலிகள், காது கேட்கும் கருவிகள், மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. ஆசிரியர் பயிற்றுநர் சீனிவாசன், ஆசிரியர் உமாசங்கர், சிறப்பு ஆசிரியர்கள் நிரோஷா, நித்யா, ஜெயலட்சுமி, கோமதி, புனிதா, ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியை சிறப்பு ஆசிரியர் ராஜேஷ் ஒருங்கிணைத்தார்.
Related Tags :
Next Story