ஆத்தூர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்


ஆத்தூர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 12 Nov 2021 5:36 PM IST (Updated: 12 Nov 2021 5:36 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்

ஆறுமுகநேரி:
ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு  கீரனூர் விலக்கு பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்று கொண்டிருந்த 4 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். அவர்கள் தப்பி ஓடினர். போலீசார் துரத்தி சென்று 2 பேரை பிடித்தனர். விசாரணையில்,  தலைவன்வடலி வடக்கு தெருவை சேர்ந்த மதன் மற்றும் ஆறுமுகநேரி பெருமாள்புரம் இசக்கிமுத்து என்பதும் தெரியவந்தது. அந்த 2 ேபரும் கஞ்சா விற்று வந்ததும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து 100  கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அந்த 2 பேரையும் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ராமச்சந்திராபுரம் முத்து பாண்டியன், சர்வோதயா பகுதியை சேர்ந்த சுபாஷ் ஆகிய 2பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Next Story