பந்தலூர் அரசு பள்ளியில் அயோடின் குறித்து கட்டுரை போட்டி
பந்தலூர் அரசு பள்ளியில் அயோடின் குறித்து கட்டுரை போட்டி
பந்தலூர்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அயோடின் குறித்து கட்டுரை போட்டி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், காந்தி சேவா மைய செயலாளர் நவ்சாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டுரைபோட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசை மாணவி கிரண்யாவும், 2-ம் பரிசை சூர்யாவும், 3-ம் பரிசை அனிதாவும் பெற்றனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டினார்கள். முடிவில் ஆசிரியர் ஜோதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story