திருத்தணி அருகே 2 ஏரிகளில் தண்ணீர் கசிவா?
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருத்தணி அருகே சூரிய நகரம் மற்றும் செருக்கனூர் ஆகிய ஏரிகள் நிரம்பி உள்ளன.
இந்த ஏரிகளில் தண்ணீர் கசிவதாக திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யாவுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா, தாசில்தார் ஜெயராணி மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் இந்த 2 ஏரிகளையும் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது ஏரி கரைகள் நன்றாக உள்ளதாகவும், தண்ணீர் கசிவு எதுவும் இல்லை என்றும் அவர்கள் கண்டறிந்தனர்.
இருந்த போதிலும் முன்னெச்சரிக்கையாக 2 ஏரிக்கரைகளிலும் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைத்தனர். மேலும் பொதுமக்கள் யாரும் பயப்பட தேவையில்லை என்று அவர்களுக்கு தைரியம் சொன்னார்கள்.
Related Tags :
Next Story