கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கன மழையால் 188 வீடுகள் சேதம்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கன மழையால் 188 வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 12 Nov 2021 9:19 PM IST (Updated: 12 Nov 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த கனமழையால் இதுவரை 188 வீடுகள் சேதம் அடைந்துள்ளன 15 கால்நடைகள் உயிரிழந்துள்ளன


கள்ளக்குறிச்சி

பருவமழை

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 25-ந் தேதி தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. தொடர்ந்து வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்தது.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பரவலாக மழைபெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான கோமுகி, மணிமுக்தா ஆகிய அணைகள் நிரம்பி வழிந்ததால் 250-க்கும் மேற்பட்ட பெரும்பாலான ஏரிகளும் நிரம்பி வழிந்தன. விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தால் கரும்பு, நெல் உள்ளிட் பயிர்கள் சேதம் அடைந்தன.

188 வீடுகள் சேதம்

மேலும் குடியிருப்புகளை மழைவெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து செல்ல முடியாமல் தவித்தனர். தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக மழை இல்லாததால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் ஓரளவு வடிய தொடங்கி உள்ளது.  பருவ மழையினால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூரை மற்றும் ஓட்டு வீடுகள் என மொத்தம் 188 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும் 15 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 

Next Story